சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகர் பிரபாஸ், சென்னை நகரம் மற்றும் தனது பள்ளி பருவம் குறித்த நினைவுகளை நெகிழ்ச்சியுடன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் படித்த காலங்களை நினைவு கூர்ந்த அவர், இன்றும் சென்னை சென்றால் தனது பள்ளியை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக குறிப்பிட்டார். ஹைதராபாத் சென்ற பின் தமிழை சற்று மறந்திருந்தாலும், தமிழ் நண்பர்களுடன் பேசுவதன் மூலம் மீண்டும் தமிழை மேம்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.