“முழுமையான விமர்சனத்தை தொடங்கவே இல்லை” - விஜய் பதிவு

47பார்த்தது
“முழுமையான விமர்சனத்தை தொடங்கவே இல்லை” - விஜய் பதிவு
திமுக அரசை விமர்சித்து தவெக தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “உண்மையில் நாம், திமுக மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நாகரிகத்துடன் வைத்தோம். அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால், நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் அவர்கள் வைக்கவே இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி