“நான் கைது செய்யப்படவில்லை” - நடிகர் தினேஷ் வெளியிட்ட வீடியோ

4870பார்த்தது
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்த சீரியல் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தான் கைது செய்யப்படவில்லை என தினேஷ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் வேறு ஒரு பிரச்சனைக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளேன். அங்கு எனது எதிர்தரப்பினருக்கு சாதகமாக வழக்கு செல்லவில்லை என்பதற்காக என் மீது பொய்யான புகார் அளித்து. என் மீது கலங்கம் ஏற்படும் வகையில் குற்றம்சாட்டியுள்ளார். நான் கைதும் செய்யப்படவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி