முன்னாள் சபாநாயகரும், அதிமுக எம்எல்ஏ-வுமான தனபாலின் மகன் லோகேஷ் இன்று (பிப்.21) தவெகவில் இணைந்தார். பின்னர் பேட்டியளித்த அவர், “அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது கட்சியில் இருந்து ஒருவரும் வந்து பார்க்கவில்லை. அடித்தட்டு மக்களின் ஆதரவை அதிமுக இழந்துவிட்டது. கட்சியின் நிலையை பார்த்து பல நிர்வாகிகள் வேதனையில் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு முதுகில் குத்தப்பட்டேன்” என்றார்.