அநியாயமாக கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்பட்டேன் - ஓபிஎஸ்

0பார்த்தது
அநியாயமாக கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்பட்டேன் - ஓபிஎஸ்
அதிமுகவிலிருந்து தான் தானாக முன்வந்து வெளியேறவில்லை என்றும், அநியாயமான முறையில் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்பட்டதாகவும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனக்கு இழைத்த இந்த அநீதிக்கு தேர்தல் களத்தில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தான் ஒருபோதும் தவறான பாதையில் செல்லமாட்டேன் என்பது தனது தொகுதி மக்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி