தமிழகத்தில் அமைந்துள்ள புதிய கூட்டணி அமைச்சரவையில், இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். அதிகாரம் ஒரே கட்சியில் குவியாமல் பகிரப்படும் இத்தகைய கூட்டணி ஆட்சி முறைதான் ஜனநாயகத்தின் உண்மையான வடிவம் என்றும், இதனை தனது கட்சி பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.