2016-ம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வெற்றி செல்லாது என்றும், அங்கு
திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை, நீதிமன்றத்தின் இந்த முடிவை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக கூறியுள்ளார். மேலும், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தனது பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி:News18