விஜய் மற்றும் தவெகவை தொடர்ந்து விமர்சிப்பேன் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (பிப்., 04) செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்யை, தவெகவை இதுவரை விமர்சிக்க தொடங்கவில்லை. இனி விமர்சிப்பேன். தவெகவில் உள்ள அல்லு சில்லுகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்பேன். 3, 4 கட்சி மாறியவர்களுக்கு பதில் தர முடியாது. சீண்டினால் நிச்சயம் பதிலடி தருவேன் என கூறியுள்ளார்.