நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் சிறப்புக்காட்சியை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, த்ரிஷா உள்ளிட்டோர் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தனர். இந்த நிலையில், சிறப்புக்காட்சியை முடித்துவிட்டு நடிகை த்ரிஷா கிளம்பும்போது, ரசிகர் ஒருவர், "தளபதியைக் கேட்டதா சொல்லுங்க..." என்றார். இதனைக் கேட்ட த்ரிஷா, 'கண்டிப்பா' எனச் சொல்லி சிரித்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.