கார்த்திகாவிற்கு 100 பவுன் நகை போடுறேன் - மன்சூர் அலிகான்

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் தங்கம் வென்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினேஷ், கார்த்திகா முக்கிய பங்கு வகித்தனர். சென்னை திரும்பிய இருவரையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் பாராட்டி தலா ரூ.25 லட்சம் வழங்கினார். பின்னர் நடிகர் மன்சூர் அலிகான் கார்த்திகாவை சந்தித்து ரூ.1 லட்சம் பரிசளித்து, “ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 100 பவுன் நகை பரிசளிக்கிறேன்” என உறுதியளித்தார்.
