விஜய்யை முதலமைச்சர் ஆக்குவேன்.. புஸ்ஸி ஆனந்த் சூளுரை

1பார்த்தது
தவெக தலைவர் விஜய்யை நிச்சயம் முதலமைச்சர் ஆக்குவேன் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் பேசிய அவர், நாம் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. எண்ணற்ற சோதனைகளை சந்தித்து வந்துள்ளோம். இன்று அரசியலின் மைய புள்ளி நம் தலைவர் விஜய் தான். அவரை அவ்வளவு எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது. ஏனென்றால் இவர் மக்களின் நம்பிக்கை; தாய்மார்களின் நம்பிக்கை; தமிழ் மண்ணின் நம்பிக்கை என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி