“வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பு இருந்தால் 2014ஆம் ஆண்டுக்குச் சென்று பிரதமரை மாற்றிவிடுவேன்” என நடிகர் கிஷோர் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நாடு இப்போது ஆபத்தான நிலையில் இருக்கிறது. வெறுப்புணர்வு நாட்டில் அதிகமாக உள்ளது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும். வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்' என்றார்.