திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் கேமராவுக்கு பின்னால் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும், ஒளிவுமறைவின்றி உண்மையாக இருப்பதால் பல விமர்சனங்களை சந்தித்தாலும் தனது சுபாவத்தை மாற்றிக்கொள்ள போவதில்லை என்றும் நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 'லக்கி பாஸ்கர்' படத்தின் வெற்றிக்கு பிறகு பான்
இந்தியா நடிகையாக உயர்ந்துள்ள அவர், தற்போது நாக சைதன்யாவுடன் 'விருஷகர்மா' மற்றும் 2 இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.