சென்னையில் இன்று (மே.30) நடைபெற்ற ‘பெத்தி’ பட நிகழ்சியில்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். அப்போது ஓய்வாக இருக்கும்போது என்ன செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் ஓய்வாக இருக்கும்போது பாடல்களைக் கேட்க மாட்டேன். என் குழந்தைகளுடன்தான் நேரம் செலவிடுகிறேன். ஏதாவது படம் பார்ப்பேன்” என்றார். மேலும், “சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் எனது அம்மாவின் நினைவிடம்தான்" எனக் கூறியுள்ளார்.