தேர்தலுக்கு முன்பே தவெக உடன் வேலை பார்த்தேன் - காங். நிர்வாகி

44பார்த்தது
தேர்தலுக்கு முன்பே தவெக உடன் வேலை பார்த்தேன் - காங். நிர்வாகி
தேர்தலுக்கு முன்பே தவெக ஐடி விங்குடன் காங்கிரஸ் இணைந்து பணியாற்றிய ரகசியத்தை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் எஸ்.ஆர்.எஸ். இப்ராஹிம் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இதில் தவறேதுமில்லை; மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் நுழையக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்குக் கள நிலவரம் தெரியும். மக்கள் ஒரு நீதியான மாற்றத்தை விரும்பியதால் இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ந்தது" எனத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பே இரு கட்சிகளிடையே புரிதல் இருந்ததை இது உறுதிப்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you