ஐசிசி ஒருநாள் (ODI) பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா முதலிடத்தை இழந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 202 ரன்கள் குவித்து 781 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்தின் டேரில் மிட்செல், ரோஹித்தை விட ஒரு புள்ளி கூடுதலாக பெற்று தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.