ICC பெண்கள் டி20 பவுலர்கள் தரவரிசை.. இந்திய வீராங்கனை முதலிடம்

4049பார்த்தது
ICC பெண்கள் டி20 பவுலர்கள் தரவரிசை.. இந்திய வீராங்கனை முதலிடம்
ICC பெண்கள் டி20 கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 800 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பவுலர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரீ சரணி, தரவரிசையில் முதலிடத்தை உறுதி செய்துள்ளார். இதனிடையே, இந்தியாவின் தீப்தி சர்மா 4 இடங்கள் முன்னேறி 2-ம் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் பெண்கள் டி20 பவுலர்கள் தரவரிசையின் முதல் 2 இடங்களையும் இந்திய வீராங்கனைகள் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி