'இட்லிகடை' படத்தில் நடித்த நடிகை ஷாலினி பாண்டேவின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் அறிமுகமான இவர், தமிழில் 100% காதல், கொரில்லா, இட்லி கடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், தற்போது தனது கவர்ச்சிப் படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.