ரசிகர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரவிமோகன், "நல்லது செய்வதற்குப்
பதவி தேவையில்லை;
பதவி இருந்தால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்றால் அதையும் ஏற்றுச் செயல்படலாம்" எனத் தெரிவித்தார். முன்னதாக ரசிகர் ஒருவர் "அண்ணா அழைப்பிதழ் கொடுங்கள் அலைகடலாய் வருவோம். கொடியை கொடுங்கள் உங்கள் ரசிகர்கள் கோட்டையை பிடிப்போம்" எனக் கூறிய நிலையில், ரவிமோகனின் இந்தப் பேச்சு அவர் விரைவில் அரசியலுக்குள் நுழையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: தந்தி