நடிகர் ரஜினிகாந்த் இன்று (மே.17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2 பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக வென்றிருக்கிறார் விஜய். அது எனக்கு பொறாமை இல்லை. ஆச்சரியம் கலந்த சந்தோஷம்” என்றார். தொடர்ந்து, ‘நீங்கள் அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றிப் பெற்றிருப்பீர்களா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, “அரசியலுக்கு வந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.