சென்னை புழல் அருகே சாலையில் விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் இளம்பெண்கள், அங்கு பணியில் இருந்த
போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்களிடம் இளம்பெண்கள் ஆபாசமாக பேசி அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், “எங்க ஏரியாவா இருந்தா இங்க சீனே வேற” என மிரட்டும் வகையில் பேசியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
நன்றி: பாலிமர்