நடிகர் ரவி மோகன் தனது பிறந்தநாளை வரும் செப்.10-ம் தேதி கொண்டாட இருக்கிறார். அதை முன்னிட்டு அவர் இன்று தனது ரசிகர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர், ரசிகர்களை சந்தித்தாலே அதை அரசியலாக பார்க்கிறார்கள் என்றும், தற்போது தாம் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு நல்லது செய்ய
பதவி தேவையில்லை என்றும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் பதவியை தேர்ந்தெடுத்து கொண்டு சேவை செய்ய தயங்க மாட்டேன் என்றும் ரசிகர் மன்ற நிர்வாகியின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
நன்றி:தந்தி