ஓபிஎஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்தால், அவருடன் உள்ள பல மாவட்ட செயலாளர்கள் தவெகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாக ஓபிஎஸ் அணியின் நீலகிரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 77 பேர் தவெகவுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். இந்நிலையில், அதற்குப் பிறகும் திமுகவுடன் செல்ல ஓபிஎஸ் விரும்புவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.