தவெக மாவட்ட செயலாளர் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் தவறு செய்தால், சரியாக பணி செய்யவில்லை என்றால் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்க கட்சி நிர்வாகிகளுக்கு உதவி எண்கள் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், மற்றொரு எண் SIR தொடர்பான சந்தேகங்களை கேட்கவும், பிற கட்சியினருடனான மோதல் குறித்து உடனடியாக அக்கட்சியின் தலைவர் விஜய் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியகியுள்ளது.