வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் பாஜக இருக்காது , பாஜக ஆளும் இடங்களில் வளர்ச்சி இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (பிப்.25) நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், "குஜராத் மெட்ரோவுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, தமிழக மெட்ரோ திட்டங்களை புறக்கணிப்பதன் மூலம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. தமிழகத்திற்கு எதையும் செய்யாத பாஜக அரசு, தேர்தல் நேரத்திற்காக மட்டுமே இங்கு வருகிறது" என குற்றம் சாட்டியுள்ளார்.