தவெக விஜயின் வருமான வரி அபராதம் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். சென்னையில் இன்று (பிப்.6) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “யாருமே சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் கிடையாது. நீதிமன்றேமே தீர்ப்பு வழங்கிவிட்டது” என்றார். மேலும், “இந்த விவகாரத்திற்கும் பாஜக தான் காரணம் என குற்றம்சாட்ட வாய்ப்புள்ளதா” என்ற கேள்விக்கு, “அரசியலுக்கு வந்தால் அனைத்து விமர்சனங்களையும் தாங்கித்தான் ஆக வேண்டும். சம்பாதிச்சா வரி கட்டி தான் ஆகணும்” என்றார்.