சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.5,000 ஒதுக்கினால், நீண்டகாலத்தில் ரூ.30 லட்சம் வரை ஓய்வுக்கால நிதியை உருவாக்க முடியும். இதற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) விருப்பக் கூடுதல் பங்களிப்பான VPF திட்டம் உதவுகிறது. ஏற்கனவே செலுத்தும் பிஎஃப் தொகைக்கு மேலாக ஊழியர்கள் விருப்பப்படி கூடுதல் தொகையைச் செலுத்தலாம். இந்தத் தொகைக்கும் பிஎஃப் கணக்கில் வழங்கப்படும் வட்டியே கிடைக்கும். முதலீட்டுத் தொகை மற்றும் காலத்தைப் பொறுத்து இறுதித் தொகை மாறுபடும்.