கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தவெக-வில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தவெகவில் தொண்டரணிக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஓய்வு பெற்ற ஐஜி ரவிக்குமார் இணைந்துள்ளார். அவரது தலைமையில் போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், உளவுப்பிரிவு உள்பட காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.