இளையராஜாவின் 83வது பிறந்தநாள்: ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டம்

10பார்த்தது
இளையராஜாவின் 83வது பிறந்தநாள்: ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டம்
இசைஞானி இளையராஜாவின் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கம் ஸ்டுடியோவில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு பாடல்களைப் பாடி வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், 1976-ல் 'அன்னக்கிளி' படம் மூலம் அறிமுகமாகி, இதுவரை 8,600-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துத் தமிழ் திரையிசையில் அழியாத முத்திரை பதித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி