இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.