பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் வரும் 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை தொடர்ந்து, NDA ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இச்சட்டத்தை கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை தொடர்பாகவும் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.