2026–27 மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருமான வரி தொடர்பான முக்கிய அம்சங்களில், ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. வருமான வரி தரவுகளை மறைத்தால் 100% அபராதம், அதே நேரத்தில், சிறிய தவறுகளுக்கு கிரிமினல் நடவடிக்கை இல்லை. மேலும், வருமான வரி கணக்கு மறு ஆய்வுக்குப் பிறகும் ரிட்டர்ன் தொடர்பாக மீண்டும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.