'அண்ணாமலை நற்பணி மன்றம்' பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை (பிப்.8) நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், அண்ணாமலையை சட்டப்பேரவைக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நாங்குநேரி தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க விருப்ப மனு அளிக்கவும் மன்றத்தினர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.