பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், மேட் டாமன், ஸ்பைடர் மேன்' பட நடிகர் டாம் ஹாலண்ட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தலைப்பு மற்றும் கதை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படத்திற்கு 'தி ஒடிஸி' என பெயரிடப்பட்டுள்ளதாகவும், கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.