ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய விவகாரத்தில் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, நவம்பர் 15-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கோதுமை அனுப்பி முடிக்கப்படும் என்றும், இதுவரை கோதுமை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் 15-ம் தேதிக்கு பின் தங்கள் ரேஷன் கடைகளில் இருந்து கோதுமை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.