பாகிஸ்தான் முன்னாள்
பிரதமர் இம்ரான்கான் உடல்நலக் குறைவு காரணமாக இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இம்ரான்கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்காமல்
பாகிஸ்தான் அரசு மறுத்து வருவதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.