இந்தியாவில் 2025 டிசம்பர் நிலவரப்படி, நகைக் கடன்களின் அளவு 3.82 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ஆனால், தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக் கடன் நிலுவை குறித்து கவலைக் கொள்ள வேண்டாம் என வங்கிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நகை மதிப்பில் 85% வரை கடன் வழங்க ஏதுவாக, அதிக வங்கி சாராத நிதி நிறுவனங்களை அமைக்கவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.