அதிகரிக்கும் காற்று மாசு.. போராட்டத்தில் குதித்த மக்கள் கைது

3485பார்த்தது
டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பொது மக்கள் நேற்று (நவ.10) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே காற்று மாசை கட்டுப்படுத்த அரசு தரப்பில் செயற்கை மழை பொழிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி