இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது டி20 போட்டி இன்று (ஜூலை.11) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது. ஜாஸ் பட்லர் அதிரடி சதம் விளாசி 131 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.