இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (ஜன.23) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், அடுத்தடுத்து நிதாரணமாக விளையாடி 15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, 209 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.