இந்தியா பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை போட்டி இலங்கையில் நடந்தது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 176 ரன்கள் டார்கெட்டை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்து 18 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.