இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் 27வது டி20 போட்டி இன்று (பிப்.15) இலங்கையில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆன நிலையில், இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து 39 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். (10 பவுண்டரி, 3 சிக்ஸர்) திலக் வர்மா 11 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இந்தியா 8.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.