இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று (பிப்.15) இலங்கையில் நடந்தது. இதில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் இஷான் கிஷன் கூறுகையில், "இந்தியா - பாகிஸ்தான் போட்டி எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் நாட்டிற்கும் ஒரு ஸ்பெஷலான போட்டியாகும்; பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும், இதைத்தொடர்ந்து செயல்படுத்த முயற்சிப்போம்" என்றார்.