டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவை இன்று (பிப்.22) எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட் செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது.