2026 ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணி தனது ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் இன்று (பிப்., 4) தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் இந்திய அணி பேட் செய்து வருகிறது. இதில், இஷான் கிஷன் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்துள்ளார். இந்திய அணி தற்போது 202 ரன்களை குவித்துள்ளது.