தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமான ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிரிக்கா அணி உணவு இடைவேளை வரை 107 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணியில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.