மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று (நவ.02) நவி மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ததால் டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. அவுட்பீல்டு ஈரமாக இருந்ததால் டாஸ் 3 மணிக்கும், போட்டி 3.30 மணிக்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.