மகளிர் உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணிகள் இடம் பெறாத முதல் இறுதிப்போட்டியானது இன்று (நவ.02) நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 7 முறையும், இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா முதல் முறையாக கோப்பையை வென்று புதிய சாதனை படைக்கும்.