டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவை இன்று (பிப்.22) எதிர்கொள்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்து வரும் தென் ஆப்ரிக்கா அணி 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. இந்திய பவுலர்கள் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.