10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (பிப்.7) தொடங்கிய நிலையில், மும்பையில் இந்தியா - அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற அமெரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா தனது முதல் போட்டியிலேயே முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.